காமெடியில் சிந்திக்க வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விவேக். துணை இயக்குனராக அறிமுகமாகி அதன் மூலம் திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமடைந்தார்.
இவரின் சுறுசுறுப்பான நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வியந்தார்கள் இதன் மூலம் இவருக்கு வரிசையாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் சினிமாவயும் தாண்டி சமூக நலன் மீது மிகவும் அக்கறை உடையவர். அந்தவகையில் அப்துல்கலாமின் நினைவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விவேக் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை கனவாக வைத்து 33 லட்சம் மரக்கன்றுகளை இதுவரையிலும் நட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கோரானா காரணத்தால் மாஸ்க் போடுவதற்காக பல விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். இவர் உயிரிழந்தத்துக்கு காரணம் கொரோனா தடுப்பூசி போட்டு அதனால் தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வரையிலும் பல திரைப்பிரபலங்கள் விவேக்கை பற்றி அவர்களுக்கு தெரிந்தவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் விவேக் இறந்ததற்கு சூர்யா உட்பட பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் விஜய் மற்றும் அஜீத் இருவரும் வரவில்லை. அதற்கு இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வந்ததால் விவேக்கின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் விஜயின் 65வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. எனவே விஜயம் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் விஜய் இன்று விவேக்கின் வீட்டிற்கு சென்று விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளார்.
விஜய் மற்றும் விவேக் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். இது ஒருபுறமிருக்க இதுவரையிலும் அஜித் விவேக்கின் மறைவைப் பற்றி எதுவும் கூறாததால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.