நடிகர் நெப்போலியன் புதுநெல்லு புதுநாத்து என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஹீரோவாக நடிப்பதை யும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுலகில் தொடர்ந்து சிறப்பாக வந்ததோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு இணை அமைச்சராகவும் இருந்து அசத்தியுள்ளார் இப்படி சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி கண்டாலும் நிஜ வாழ்க்கையில் சில வேதனையுடன் தான் இருக்கிறார் நெப்போலியன் இரண்டு மகன்களில் ஒரு மகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் நெப்போலியன் தனது குடும்பத்துடன் தங்கி தற்போது உள்ளார்.
மேலும் அமெரிக்காவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக ஐடி கம்பெனியை நடத்தி வருகிறார் மேலும் அங்கு சொந்தமாக இடம் வாங்கி விவசாயம் செய்து அசத்துகிறார் அதன் வீடியோ கூட அண்மையில் வெளிவந்து வைரலானது. அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் வாரம் ஒருமுறை தனது அமெரிக்க நண்பர்களை நேரில் அழைத்து சந்தித்து.
நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி சமீபத்தில் நடந்த அவருடைய நண்பர்கள் சந்திப்பின் பொழுது ஒரு நண்பர் நடிகர் விஜய் குறித்து பேசுமாறு கேட்டுள்ளார். உடனே டென்ஷனான நெப்போலியன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் மரியாதை தெரியாத ஒரு நபரை பற்றி பேச வேண்டுமென தெரிவிக்க உடனே மற்ற நண்பர்கள் சமாதானப்படுத்தி உள்ளனர்.
விஜய்க்கும், நெப்போலியனும் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம் போக்கிரி படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்தார் நெப்போலியன். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நெப்போலியனின் நண்பர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என கூறி உள்ளனர். படப்பிடிப்பிற்கு நெப்போலியன் நண்பர்கள் வந்து சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்பி உள்ளனர்.
இதனையடுத்து நெப்போலியன் விஜய் இருக்கும் கேரவனுக்கு தனது நண்பர்களை அழைத்து சென்று உள்ளார் கேரவன் உள்ளே செல்ல நெப்போலியன் கதவை திறக்க முயற்சித்தார் ஆனால் பாதுகாவலர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரித்தது சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
திடீரென கேரவனை விட்டு வெளியே வந்த விஜய் பாதுகாவலர் சொன்னது தான் பார்க்க முடியாது என்றால் முடியாது பிறகு ஏன் இங்கு சத்தம் போட்டு தொந்தரவு செய்கிறீர்கள் என நெப்போலியனை பார்த்து கோபத்துடன் கேட்டு விட்டு மீண்டும் கேரனுக்கு உள்ளே சென்று விட்டார் விஜய். இது நெப்போலியனுக்கு ஒரே அசிங்கமாக போகிறது. அதிலிருந்து நெப்போலியன் விஜய் பற்றி பேசவே மாட்டார் பேச சொன்னாலும் உடனே டென்ஷன் ஆகிவிடுவாராம்.