கமலின் “விக்ரம்” படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜிடம் என்ன சொன்னார் தெரியுமா..

kamal-
kamal-

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது மேலும் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகியுள்ள இந்த விக்ரம் படம்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து முக்கிய நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் நரேன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். அதனால் படத்தின் எதிர்ப்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சில வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகிய நிலையில் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் திரைப்படம் உலக அளவில் கோலாகலமாக அதிக திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாக உள்ளது. விக்ரம் படம் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் படம் வெளியாக இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாரி மாரி விக்ரம் படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பேட்டியில் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் விஜய் சார் விக்ரம்.

படத்தை பார்த்து உள்ளாரா எனக் கேட்கப்பட்டது அதற்கு லோகேஷ் கனகராஜ் விஜய் சார் இன்னும் விக்ரம் படத்தை பார்க்கவில்லை ஆனால் விக்ரம் படத்துக்காக வெயிட்டிங் டா என என்னிடம் கூறினார் என்பதை பேட்டியில் தெரிவித்துள்ளார்.