தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் காதல் கலந்த படங்களை கொடுத்து வெற்றி கண்டார். பின்பு ஒரு கட்டத்தில் ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்தார் அதுவும் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது எந்தவிதமான படங்களாக இருந்தாலும்..
அதில் சூப்பராக நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளுகின்றன. கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கூட நல்ல வசூலை பெற்ற நிலையில் தற்போது வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் பொது நிகழ்ச்சிகள் ஊடகம் போன்ற எதிலும் தலை காட்ட மாட்டார். ஆனால் அவர் குறித்த சில செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தான் வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த..
மலையாள இயக்குனரும் நடிகர் பகத் பாசிலின் அப்பாவும் ஆன பாசில் விஜய் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியது விஜய்க்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் முக்கியமாக ஹீரோயிசம் இல்லாத படங்களில் நடிக்க ஆர்வம் அதிகமாம் ஆனால் அதை விஜய் செய்ய மாட்டாராம்.
விஜய் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் படி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அவரது படத்தில் பாட்டு, டான்ஸ், சண்டை காட்சிகள் இருக்க வேண்டும் எனக் கூறுவாராம். ஆனால் இப்பொழுது விஜய் ரசிகர்கள் முழுக்க மாறி விட்டார்கள் கதைகளம் நல்லதாகவும் விருவிருப்பாகவும் இருந்தால் போதும் எனவும் நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றும் கூறலாம் என பாசில் பேசியுள்ளார்.