புலி படத்திற்காக வாங்கிய சம்பளத்தை மறைத்த விஜய்.? வருமானவரித்துறையினர் அபராதம்.! இப்போ நிலவரம் என்ன தெரியுமா..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் வெற்றி படமாக மாறியதை அடுத்து இப்போ விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, என அனைத்தும் கலந்த கலவையான படமாக உருவாகி வருகிறது என படத்தின் தயாரிப்பாளரும் இந்த படத்தில் நடித்து வரும் சரத்குமாரும் ஏற்கனவே சொல்லிவிட்டனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுத்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து கேங்ஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் கலந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி இந்த படத்திற்காக நடிகர் விஜய் சுமார் 15 கோடி சம்பளம் வாங்கி உள்ளார், ஆனால் இந்த சம்பளத்தை மறைத்துள்ளார்.

இதனை அடுத்து நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறையினர் 1.5 கோடி அபராதம் விதி திரிந்தனார் இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டிருந்த 1.5 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.