இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பல வகையான சாதனையை படைத்துள்ளது மேலும் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று தான் தலைவா இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாக படம் வசூல் செய்தது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கி இருப்பார்.
என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து அமலாபால்,சந்தானம்,சத்யராஜ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளதால் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து இந்த படத்தில் வரும் வாங்கன்னா வணக்கங்கனா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கியது.
இந்நிலையில் இந்த பாடலை இசையமைத்து முடித்த பொழுது இயக்குனர் விஜய்யும் தல அஜித்தும் ஒரே ஹோட்டலில் தான் இருந்தார்களாம்.அப்பொழுது தல அஜித்தை சந்தித்த இயக்குனர் விஜய் அஜித்திடம் இந்த பாடலை முதன் முறையாக போட்டு காட்டினாராம்.
அப்பொழுது தல அஜித் இந்த பாடலை பார்த்துவிட்டு பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இன்னொரு முறை கூட போடுங்க என இயக்குனர் விஜயிடம் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடந்து வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.