தளபதி விஜய் சிகரெட் பிடிக்கும் போது பக்கத்தில் நான் தான் இருப்பேன்- பேட்டியில் விஷயத்தை உடைத்த கேமராமேன்.!

vijay
vijay

திறமை இருக்கும் நடிகர் நடிகர்கள் இயக்குனர்கள் என அனைவரும் ஒருகட்டத்தில் தனது அடுத்தடுத்த திறமையை வெளிப்படுத்துவது உண்டு அந்த வகையில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறுவதும் உண்டு அதே போல இசை அமைப்பாளராக இருந்து பின் ஹீரோவாக மாறுவது தமிழ் சினிமாவில் நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக இயக்குனராக பணிபுரிந்தவர் விஜய் மில்டன் இவர் முதலில் நடிகர் பரத் மல்லிகா கபூரை வைத்து “அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது” என்னும் காதல் மற்றும் காமெடி கலந்த படத்தை இயக்கியிருந்தார் ஆனால் முதல் படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமையவில்லை.

இதனை தொடர்ந்து விஜய்மில்டன் காதல், வழக்கு எண் 18/ 9, கோலி சோடா மற்றும் கடுகு ஆகிய படங்களில் இவரது ஒளிப்பதிவு இயக்கம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது அதனை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு விக்ரம் சமந்தா ஆகியோர் நடிப்பில் 10 எண்றதுக்குள்ள என்னும் படத்தையும் இயக்கினார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜயின் பெரும்பாலான இடங்களை ஒளிப்பதிவு செய்து உள்ளவர் விஜய்மில்டன் அவர் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார் நானும் விஜய்யும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆனோம் சொல்லப்போனால் சூட்டிங் நேரத்தில் விஜய் தனியாக தம்மடிக்க போவார் அவருக்கு நான் தான் கம்பெனிக்கு போவேன். வழியில் நிற்பேன்.

அவர் குளோஸ் பிரண்ட்ஸ் 4 பேர் வந்தால் சூட்டிங்கில் அவர்களுடன் தான் பேசுவார் ஹீரோயின் கூட விஜய் பேசமாட்டார் அமைதியாக இருப்பார் ஆனால் இப்போது விஜய் நிறைய மாறி விட்டார் என கூறினார்.