வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தான் – உண்மையை போட்டு உடைத்த சியான் விக்ரம்..!

vikram
vikram

அண்மைக்காலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன அந்த வகையில் இப்போ இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை தற்பொழுது எடுத்துள்ளார் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அதாவது நாளை பொன்னியின் செல்வன். முதல் பாகம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு,  பார்த்திபன்,  பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.  படம் வெளிவருவதற்கு முன்பாகவே போஸ்டர், டீசர், ட்ரெய்லர், பாடல் என அனைத்தும் வேற லெவலில் இருந்தன.

அதனை தொடர்ந்து படகுழுவும் வேற லெவலில் பிரமோஷன் பண்ணி உள்ளது நிச்சயம் அதனால் பொன்னியின் செல்வன். முதல் பாகம் முதல் நாளில் அதிக வசூலை அள்ளுவதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளி தான் படம் நிற்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விக்ரம்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்தது குறித்து பேசி உள்ளார் அதன்படி அவர் சொன்னது. கார்த்தி தற்பொழுது நடித்துள்ள வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க இருந்தது விஜய்.. ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில்  முதலில் நடிக்க இருந்தது மகேஷ் பாபு தான் என கூறினார்.

அதித்த கரிகாலன்  கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டது நான் தான் என சியான் விக்ரம் பேசி உள்ளார். இந்த செய்தியை தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தாலும் இந்த படத்தில் அவர் நடிக்காமல் போனது அவரது ரசிகர்களின் சற்று வருத்தத்தை கொடுத்து தான் இருக்கிறது.