தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஓடிக் கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக தனது ரூட்டை மாற்றி கொண்டு நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது செண்டிமெண்ட், ஆக்சன் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்தது.
தற்பொழுது அது போன்ற படங்களையே பெரிதும் நடித்து வருகிறார் இதனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் கூட சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு அமீர் கான் இயக்கத்தில் வெளியான “மௌனம் பேசியதே” இந்த திரைப்படம் அப்போது வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. இந்த படம் குறித்து இயக்குனர் அமீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறிய செய்தி என்னவென்றால் மௌனம் பேசியதே கதையை முதலில் நான் தளபதி விஜய் உடன் தான் கூறியிருந்தேன் அவரது அப்பா அந்த படத்தில் சில மாற்றங்களை செய்ய சொன்னதால் தனக்கு ஒத்துவராது என்று கூறி கைவிட்டு உள்ளார். அதன்பின் விஜயை அவர் சந்திக்க வில்லை. விஜய்யை வைத்து முதலில் மௌனம் பேசியதே.
திரைப்படத்தில் இவர் கொடுக்க இருந்த கதாபாத்திரம் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க வைக்க இருந்தாகவும், நந்தா நடித்த கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்கவும் தான் அவர் ஆசைப்பட்டார் ஆனால் அது நடக்கவில்லை இருப்பினும் இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.