பிரசாந்த் பட வெற்றி விழாவில்  உள்ளே விடாமல் அவமதிக்கப்பட்ட விஜய்.! அதன் பிறகு நடந்தது தரமான சம்பவம்.

prashanth
prashanth

Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்பொழுது சினிமாவில்  கொடிகட்டி பறந்திருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளையும், சிக்கல்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார். இன்று தளபதியின் கோட்டை பிரமாண்டமாக இருப்பதற்கு காரணம் விஜயின் அப்பா எஸ் ஏ சி சந்திரசேகர் தான் என ஒரு தரப்பு மக்கள் கூறுகிறார்கள்.

தளபதி விஜய் அவர்களுக்காக கதை கேட்பது சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பது நல்ல இயக்குனர்களை விஜய் பக்கம் மடை மாற்றுவது என எஸ் ஏ சி சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம் எஸ் ஏ சி சந்திரசேகர் பக்கபலம் இருந்ததால் தான் இன்று விஜய் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது. அதேபோல் எஸ் ஏ சி சந்திரசேகர் தளபதி விஜய் எந்த நேரத்தில் குடும்பங்களை கவர வேண்டும் எப்பொழுது கமர்சியல் திரைப்படத்தை வெளியிட வேண்டும் எந்த நேரத்தில் மக்களை கவர வேண்டும் என செதுக்கி வைத்திருக்கிறார்.

கமர்சியலில் கொடி கட்டி பறந்து வந்த விஜயின் மனதில் அரசியல் விதையை விதைத்ததும் எஸ் ஏ சி சந்திரசேகர் தான் அவருடைய ஐடியாவால் தான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றமாக மாற்றியது சமீபத்தில் கூட 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்தது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது என அரசியல் பாதைகளை வழி வகுத்து கொடுத்துள்ளார்.

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் ஒரு காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தது அந்த வகையில் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியாகிய பிறகு பிரபல பத்திரிக்கை நிருபர் ஒருவர் விஜய்யை உருவ கேலி செய்து எழுதி பல விமர்சனங்களையும் சந்தித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது பிரசாந்த் பட வெள்ளிவிழாவில் விஜய் அசிங்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது பிரசாந்த் நடித்த அவரது முதல் திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது அந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கமலா திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்பொழுது விஜய் சினிமாவில் கிடையாது அந்த சமயத்தில் எப்படியாவது உள்ளே நுழைந்து பிரசாந்த் அவர்களை பார்த்து விட வேண்டும் என எண்ணி விஜய் உள்ளே நுழைந்திட முயற்சி செய்துள்ளார் ஆனால் விஜய் அவர்களை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை அப்பொழுதுதான் விஜய்க்கு தெரிந்தது நமக்கு தெரிந்த ஒருவர் சினிமாவில் வென்று விட்டால் நம்மை யாருமே மதிக்க மாட்டார்கள்.

அதனால் விஜய் ஒரு முடிவு எடுத்தார் நாமும் நடிகனாக மாற வேண்டும் என்று சபதம் எடுத்து எஸ் ஏ சி சந்திரசேகர் அவர்களை நச்சரிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு தான் தளபதி விஜய் வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.