தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.
இத்திரைப்படம் கலவை விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது இதற்கு முக்கிய காரணம் விஜயின் ரசிகர்கள் தான் இந்த திரைப்படத்தை ஏராளமானோர் தற்போது வரையிலும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 67வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜயின் பிரியமுடன் என்ற திரைப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன் ஒரு சுவாரசியமான தகவலை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒன்று தான் விஜய்யின் நிறைவேறாத ஆசை என்றால் அதாவது 2000ம் ஆண்டிற்கு பிறகு நான் நடிப்பதை விட்டு விடப் போகிறேன் என விஜய் கூறியுள்ளார். விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடவேண்டும் என்றும் திரைப்படங்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுவதாக கூறினாராம்.
கொஞ்சம் கூட யோசிக்காமல் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் விஜயை பற்றி கூறியது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இவ்வாறு விஜயின் ஆசை நிறைவேற வில்லை என்றாலும் இவரின் மகன் சஞ்சய் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கன்னடா சென்று சினிமா இயக்குவது தொடர்பான படிப்பை முடித்துள்ளார் மேலும் படம் இயக்கும் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளிவந்துள்ளது