லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் இப்போ கமலை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து 67 வது திரைப்படத்தையும் இவர் தான் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது அதற்கான வேலைகள் தான் தற்போது லோகேஷ் கனகராஜ் பார்த்து வருவதாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இப்படி இருக்க தளபதி விஜய் தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி வித்தியாசமான ஒரு கதையை வைத்து இயக்கி வருகிறாராம் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடிக்கிறார் மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தளபதி விஜய் இந்த படத்தை முடித்தவுடன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைவார் என தெரியவருகிறது.
தளபதி 67 படத்தை வேற மாதிரி எடுக்க படக்குழு படக்குழு அதை ஏற்றபடி நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது இந்த நிலையில் ஹீரோயின்களை தேர்வு செய்து வந்த நிலையில் தளபதி விஜய்யை நான் அடுத்த படத்தில் சமந்தாவுடன் தான் நடிக்க வேண்டும் என கட்டளை இட்டுள்ளார்.
அதனால் தளபதி 67 படத்தில் சமந்தாவுடன் கைகொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமந்தா காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தான் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார் இருப்பினும் அவரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.