தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
படம் முழுக்க முழுக்க சர்வதேச போதைக்கு பொருளை மையமாக வைத்து கதை நகரும் என சொல்லப்படுகிறது லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், கௌதமேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.
சிக்கிரமே “லியோ” திரைப்படத்தை எடுத்து இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாம்.. இது இப்படி இருக்க மறுபக்கம் விஜய் பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகள் இணையதள பக்கங்களில் கசிவது வழக்கமான ஒன்றுதான் அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
தளபதி விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக மாற வேண்டும் என்பதே ஆசை அதன் காரணமாகத்தான் தற்பொழுது திரை உலகில் நுழைந்து குறும்படங்களை எடுத்து வருகிறார். ஆனால் விஜய்க்கு இருந்த ஆசையே வேறு.. விஜய் தன்னுடைய மகன் சஞ்சயை மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக வீட்டின் மொட்டை மாடியில் மினி கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றையும் விஜய் வடிவமைத்து வைத்திருந்தார்.
அதோடு மட்டுமின்றி சஞ்சய் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட அவருக்கு என ஒரு தனி பயற்சியாளரையும் நியமனம் செய்தார் ஆனால் காலப்போக்கில் சஞ்சய்க்கு கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தை விட இயக்குனராக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாராம் தற்பொழுது ஒரு குறும்படத்தை இயக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.