பேட்மிட்டன் விளையாடும் தனது மகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் தளபதி விஜய் இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ காணொளி.!

vijay

இளைய தளபதி விஜய் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆனது மேலும் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது என சமிபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதள பக்கங்களில் வெளியானது.

இதனையடுத்து தளபதி 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போகிறார் என்பதும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகின.

தளபதி விஜய்யின் திருமண வாழ்க்கையில் சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஐசான் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மேலும் விஜய்யின் ஐசான் சஞ்சய் விஜயை போல் நன்றாக படிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

விஜயின் மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு அதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தனது மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாடும் பொழுது தனது மகள் எவ்வளவு அழகாக விளையாடி வருகிறார் என்பதை விஜய் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்.

அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ காணொளியை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.