தமிழ் சினிமாவில் வானத்தைப்போல என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் ரவிச்சந்திரன் இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் திரைப்படத்திற்காக பல்வேறு பிரபலங்களும் நடிகர்களும் காத்திருப்பது வழக்கம் தான்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவர் ஆஸ்கார் விருதையும் பெற்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் என பெயர் எடுத்து விட்டார் மேலும் இவர் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமாக இருந்தாலும் மாபெரும் வெற்றி கொடுத்து வந்தது.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ரமணா அண்ணியன் 2 தசாவதாரம் வாரணமாயிரம், ஆனந்த தாண்டவம், மரியான், ஐ போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் ஐ திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதே நேரத்தில் மற்ற திரைப்படத்தை தயாரிக்கவும் ஒரு வங்கியிலிருந்து கடன் பெற்றுள்ளார்.
அந்த வகையில் இவர் விஜய்யை மலைபோல் நம்பி வேலாயுதம் என்ற திரைப்படத்தையும் தயாரித்து இருந்தார் ஆனால் இந்த அனைத்து திரைப்படங்களும் அவருக்கு மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்திவிட்டது இந்நிலையில் தற்போது வங்கி கடனை செலுத்த முடியாததன் காரணமாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் 150 கோடி சொத்து ஏலத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அன்னியன் திரைப்படத்தினை இயக்குனர் சங்கர் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார் ஆனால் அதற்கு நமது தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்து அந்நியன் கதை உரிமம் என்னிடம் தான் உள்ளது என இந்த ரீமேக் படத்தை ஜாக்கிசானை வைத்து எடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நெருக்கடியிலும் இந்த திரைப்படத்தை எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.