தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூர்யா விக்ரம் விஜய் போன்றோர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தற்போது அதிரடியான ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.
சினிமாவில் எப்படி நல்ல பிரண்ட்ஷிப் உடன் இருக்கிறார்களோ அது போலவேதான் பொது நிகழ்ச்சிகளிலும் மற்றும் அவர் அவரது படங்களிலும் நடிபதற்கு முன்பாக பூஜையில் கலந்துகொள்ள வைப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இது இப்படி இருந்தாலும் திரையுலகில் இவரது திரைப்படங்கள் ஒருவரை ஒருவர் மோதி கொள்ளும் போது மட்டும் தான் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இதை போட்டியாக பார்க்கின்றனர்.
யார் திரைப்படம் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுவது என்பதை கணித்து அதனை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனை எல்லாம் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய் சூர்யா விக்ரமன் போன்றவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சினிமாவில் பயணிக்கின்றனர்.
அதற்கு உதாரணமாக இதை கூட சொல்லலாம் சூரியவின் “மௌனம் பேசியதே” திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த திரைப்படத்தின் பூஜையின் போது சூர்யா ஜோதிகா மற்றும் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் சியான் விக்ரம் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டு சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.