தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூவர்களையும் வைத்து இயக்குனர் ஒருவர் படம் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது எனவே மூன்று தரப்பு ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் மூவரையும் வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று தங்களது பல கருத்துக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது தான் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்து விட்டு தளபதி 65 திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இவரைத் தொடர்ந்து விக்ரமும் மாவீரர் கர்ணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது திரையுலகில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சங்கர் இவர்தான் இந்த மூன்று நடிகர்களையும் வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்த அப்டேட் பற்றிய சில உண்மைகளை நடிகையுமான,தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் இதற்கு பதில் அளித்துள்ளார். இதனைப் பற்றி கூறுகையில் இது வெறும் கற்பனையான தகவல் மட்டுமே இது உண்மை இல்லை என்றும் நடிகர் விஜய்,விக்ரம், விஷால் இவர்கள் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கப்போவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி மட்டுமே என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.