சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க அயராது தனது படங்களில் நடித்து வருகின்றனர். தனது படங்களை சோலாவாக வெளியிடுவதை விட தனக்கு நிகராக இருக்கும் நடிகர்களுடன் நேருக்கு நேர் படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் அஜித் – விஜய், ரஜினி -கமல், எம்ஜிஆர் – சிவாஜி என பலர் நாம் மோதி பார்த்து இருக்கிறோம்.
ஆனால் சைலண்டாக விஜயும், விக்ரமும் மோதியுள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்க்கலாம். 1. விஜயும், விக்ரமும் முதல் முதலாக 2001 ஆம் ஆண்டு தீபாவளி அன்று விக்ரமின் காசி விஜயின் ஷாஜகான் ஆகிய இரு திரைப்படங்கள் மோதின இதில் காசி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலை அள்ளியது. ஷாஜகான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை ஆனால் இந்த படத்தில் காமெடி செம்மையாக இருந்தது.
2. 2002 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜயின் தமிழன் விக்ரமின் ஜெமினி படங்கள் மோதின இதில் ஜெமினி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தமிழன் திரைப்படம் சுமாராக ஓடியது. 3. அந்த வருடம் ஜூலை மாதத்தில் விஜயின் யூத் விக்ரமின் சாமுராய் படம் மோதின யூத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது சாமுராய் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
4. 2003 ஆம் ஆண்டு பொங்கல் அன்று விக்ரமின் தூள் விஜயின் வசீகரா படம் வெளியானது இதில் தூள் படம் பட்டி தொட்டி எங்கும் பரவி வசூல் வேட்டையாடியது வசீகரா திரைப்படம் ஓரளவு டீசன்டாக ஓடியது. 5. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விக்ரமின் காதல் சடுகுடு விஜயின் புதிய கீதை படங்கள் மோதின. இந்த இரண்டு படங்களுமே சொல்லி கொள்ளும்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.
6. 2003 வருடம் தீபாவளியை முன்னிட்டு விக்ரம் சூர்யா நடிப்பில் உருவான பிதாமகன் படமும் விஜய்யின் புதியகிதை படமும் வெளிவந்தது இந்த இரண்டு படங்களில் பிதாமகன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. பிதாமகன் படத்திற்கு இணையாக விஜய் படம் ஈடு கொடுக்கவில்லை என்றாலும் கமர்சியல் வெற்றி அடைந்தது. 7. 2005 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு விஜயின் சிவகாசியும் விக்ரமின் மஜா படம் வெளியாகியது இதில் சிவகாசி படம் சூப்பர் ஹிட் அடித்தது மஜா படம் ஓரளவு டீசன்டாக ஓடியது.