வேட்டைக்காரன் திரைப்பட பாடலில் விஜய் பெண் வேடம் போட்டதற்கு காரணம் இதுதான்!! வெளியான தகவல்.

vettaikaran
vettaikaran

 

வித்தியாசமான கதை உள்ள ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செட்டில் விஜய் மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாட உள்ளார்கள்.

இந்நிலையில் விஜய் பற்றிய சில சுவாரசியமான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அந்த வகையில் ஒரு திரைப்படம்தான் வேட்டைக்காரன்.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருப்பார் இவரை தொடர்ந்து இன்னும் சில திரை பிரபலங்களும் நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் விஜய் போலீஸாக வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார் அதற்காக பல பிரச்சனைகளும் வரும் அதன் பிறகு விஜய் போலீசாகி விடுவார்.

அந்த வகையில் இரண்டாம் பகுதியில் இருந்து இத்திரைப்படத்தின் கதை மிகவும் விறுவிறுப்பாக பல எதிர்பார்ப்புகளுடன் அமையும். இப்படிப்பட்ட நிலை  இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த கரிகாலன் காலப் போல என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும் இதில் விஜய் ஒரு பாதி பெண்ணாகவும் பாதி ஆணாகவும் வேடமணிந்து நடனமாடி இருப்பார்.

இதே போல் நடனம் ஆடுவதற்கும் வேடம் அணிவதற்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான் கூறியிருக்கிறார். ஏனென்றால் இவ்வாறு தினேஷ் விஜயை வேடம் அணிய  கூறியதற்கு முக்கிய காரணம் பாலிவுட் நடிகர் அமீர்கான் தானாம். அமீர்கான்  Tata sky விளம்பரத்தில் பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாக வேடம் போட்டு இருப்பார் அதை பார்த்து தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் விஜயை வேடம் அணிய சொன்னாராம்.