தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், அதுமட்டுமில்லாமல் விஜய் திரைப்படம் சமீபகாலமாக வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் விஜய் திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படி விஜயின் திரைப்படம் வசூலில் கல்லா கட்டி வருகிறது, மேலும் கடந்த வருடம் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் கொரனோ ஊரடங்கு காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய கொண்டே போகிறது.
அப்படி இருக்க விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
மேலும் விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப் படத்தில் நடிப்பார் என ஒரு பேட்டியில் வெற்றிமாறன் அவர்களே கூறியிருந்தார், இவர்களின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் வெற்றிமாறனுடன் இணைந்து தளபதி விஜய் நடித்தால் இப்படிதான் போஸ்டர் இருக்குமென புதிய புகைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்.