வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியின் கோட் இன்று வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்திருக்கும் இப்படம் 5000 ஸ்கிரீனில் திரையிடப்பட்டுள்ளது.
அதனாலேயே முதல் நாள் வசூலும் தரமான சம்பவமாக இருக்கும் என ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் டிக்கெட் முன்பதிவு கூட ரெக்கார்ட் சாதனையாக அமைந்தது.
கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் 450 கோடியை நெருங்கியிருந்தது. இதனால் போட்ட பணத்தை ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர் எடுத்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து இப்படம் 500 கோடி இல்ல 1500 கோடி வசூலிக்கும் என பிரேம்ஜி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என நினைத்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை என்பதும் கூடுதல் தகவல்.
அந்த வகையில் தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் கோட் முதல் நாளில் 120 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.. காலை காட்சியை விட இப்போது மாலை காட்சிக்கு ரசிகர்களின் வரவு அதிகமாக இருக்கிறது.
சோசியல் மீடியாவில் படம் பற்றி சில நெகட்டிவ் கருத்துக்கள் பரவி இருந்தாலும் கோட் ரசிகர்களுக்கான ட்ரீட் தான். தற்போது வெளிநாட்டிலும் வசூல் வேட்டை அமோகமாக இருக்கும் நிலையில் நாளை அதிகாரப்பூர்வமான வசூல் ரிப்போர்ட் வந்துவிடும்.