தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆக்ஷன் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர் அவர்களில் ஒருவராக தளபதி விஜய்யும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து மக்களை சந்தோஷப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது மார்க்கெட்டையும் உயர்த்திக் கொண்டே வந்தார்.
இதனால் திரையுலகில் இருக்கும் பலரும் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் என கூறி வந்தனர் ஆனால் விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் விஜய் கேரியரில் மரண அடி வாங்கியது அதனைத் தொடர்ந்து வெளிவந்த வாரிசு திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது.
ஆனால் இந்த படமும் ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்து வருவதாக தகவல்கள் வெளிவருகிறது. ஏன் படகுழுவே ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியது இப்படி இருந்தாலும் ஒரு சில இடங்களில் வாரிசு திரைப்படம் லாபத்தை எடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வாரிசு திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருந்தாலும் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை என கூறப்படுகிறது இது தவிர தெலுங்கில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என வாரிசு படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் கூறி வந்த நிலையில்..
அங்குமே எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல தமிழகத்திலும் அதிக வசூலை அள்ளி இருந்தாலும் இன்னும் லாபக் கணக்கில் வரவில்லை என சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.