தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் தற்போது வரையிலும் தமிழகத்தில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான நிலையில் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தில்ராஜ் தன் டீம் மூலம் ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக கூறியிருந்தார் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இவை அனைத்தும் பொய் ஏன் இவர் இப்படி செய்கிறார் என பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் சித்ரா லட்சுமணனிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். மேலும் தில்ராஜ் அவர்கள் வசூல் ஆனதை விட அதிகமாக கூறியுள்ளார்.
இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக விரைவில் இது குறித்த உண்மையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பொருத்தவரை விஜய் அவர்கள் நம்பர் ஒன் இடத்திலிருந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று விடும்.
அதேபோல்தான் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான தில்ராஜ் இயக்கிய நிலையில் சொல்லும் அளவிற்கு கதைகளாம் அமையவில்லை. செண்டிமெண்ட், ஆக்சன் என எதுவும் ரசிகர்களை கவரவில்லை ஜவ்வு போல் சின்ன விஷயத்தை இழுத்து இருந்தார் எனவே அப்படியே தெலுங்கு திரைப்படம் போல் இருந்ததாக பலரும் கூறினார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் திரிஷா, விஜய் இவர்களுடைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரிஷா காஷ்மீர் சென்ற மூன்று நாட்களில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.