Thalapathy vijay tweet : தளபதி விஜய் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார் தமிழ் சினிமாவில், சமீபகாலமாக விஜயின திரைப்படங்கள் வசூலில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது, இதே நிலைமை நீடித்தால் பாலிவுட்டிற்கு நிகராக தமிழ்சினிமா வளர்ந்துவிடும் என பலரும் கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் விஜய்யின் திரைப்படம் அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது, இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் விஜய்யை ஒரு சவாலுக்கு அழைத்தார், மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாளில் மரக்கன்று நட்டு அதேபோல் தளபதி விஜய்யும் மரக்கன்று நடுமாறு சவால் விட்டார்.
தளபதி விஜய் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த புகைப்படம் மிகப்பெரிய வைரலானது.
தளபதி வெளியிட்ட புகைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சம் லைக்ஸ் பெற்று இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது, பல நடிகர்களுக்கு சமூகவலைதளத்தில் அதிக ஃபாலோஸ் இருக்கும் நிலையில் குறைந்த ஃபாலோஸ் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இதைப்பார்த்த சக நடிகர்களின் ரசிகர்கள் மிரண்டு போகிறார்கள், அதை இந்த பதிவில் பார்த்தாலே உங்களுக்கே புரியும். தளபதி என்றுமே தனிரகம் என ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.