விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது – அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இல்லத்தரசிகள்.?

vijay-tv-serial

சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் அதிகம் சீரியல்களை நடத்தி TRP – ல் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் சன்டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளுக்கு நிகராக விஜய் டிவி தொலைக்காட்சியும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை தொகுத்து வழங்கி அசத்துகிறது.

இதன்மூலம் டிஆர்பி யில் நல்லதொரு இடத்தைப் பிடிக்கிறது விஜய் டிவி. ஆரம்பத்தில் விஜய் டிவி பெரிதும் பாடல், விளையாடு, நடன நிகழ்ச்சி போன்றவற்றை தான் அதிகம் ஒளிபரப்பியது ஆனால் இப்பொழுது தனது ரூட்டை மாற்றி அதிகம் சீரியல்களை கொடுத்தே இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருவது  நாம் இருவர் நமக்கு இருவர், பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், ராஜா ராணி 2  போன்றவை வரிசைகட்டி இருக்கின்றன. அனைத்து சீரியல்களும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

nam iruvar namakku iruvar
nam iruvar namakku iruvar

இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் பேமஸான சீரியலாக இருப்பது நாம் இருவர் நமக்குஇருவர்.  இதன் முதல் பாகம் ஒளிபரப்பாகி செம்ம ஹிட்டாகி தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில்குமார், மோனிஷா அர்ஷக், ரட்சிதா மகாலட்சுமி மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சரண்யாவின் திருமணம் முடிந்ததும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முடிவை எட்டி விடும் என்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.