Pandiyan stores serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நான்கு அண்ணன் தம்பிகளின் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது மார்பக புற்றுநோயால் தனம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் ஆப்ரேஷன் மூலம் சரிசெய்ய இருக்கின்றனர்.
தனத்திற்கு புற்றுநோய் இருப்பதை மீனா முல்லை மறைத்த நிலையில் ஆனால் இதனை கதிர் கண்டுபிடித்துள்ளார். முல்லை தனத்திடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கதிர் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க உண்மையை சொல்லு என்ன முல்லையை அதட்டி கேட்க முல்லை உண்மையை போட்டு உடைக்கிறார்.
இதனால் கதிர் அதிர்ச்சியடைய பிறகு கதிர் துணையுடன் தனத்திற்கு ஆப்ரேஷன் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய போவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை கடைசி நாள் ஷூட்டிங் போட்டோவாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்த அடுத்த நாளிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியல் போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது பாகம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.