விஜய் டிவி நடத்திய “பிக்பாஸ் கொண்டாட்டம்”.. ஒருவர் மட்டும் மிஸ்.! யாருப்பா அது

bigboss 6
bigboss 6

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர தொடர்ந்து வித்தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளை கொடுத்துக் கொண்டு வருகிறது விஜய் டிவியில் தற்போது மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் என்றால் அது பிக்பாஸ் தான்.

இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் 6 – வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு கோலாகலமாக முடிந்தது. இந்த சீசனில் பலரும் சிறப்பாக விளையாண்டாலும் கடைசி மூன்று இடத்தை ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியவர்கள் பிடித்தனர் கடைசியில் அதிக ஓட்டுக்களை வாங்கி அசீம் முதலிடத்தை பிடித்தார்.

அவருக்கு புதிய கார் ஒன்றும், மேலும் டைட்டில் கப், 50 லட்சம் பணம் மற்றும் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததற்கு மிகப்பெரிய ஒரு தொகையையும் அவர் தட்டி தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே வந்த அவர் நான்  25 லட்சம் பணத்தை இல்லாதவர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு கொடுப்பதாக கூறினார்.

இது அசீமுக்கு இன்னும் பாராட்டை பெற்றுத் தந்தது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் போட்டியாளர்களை வரவைத்து ஒரு ஷோவை நடத்திய உள்ளது இதில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒருவர் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. நிவாஷினி மட்டும் கலந்து கொள்ள வில்லை.. அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது வரை தெரியவில்லை. ஆனால் நல்லபடியாக “பிக்பாஸ் கொண்டாட்டம்” அரங்கேறி முடிந்துள்ளது என கூறப்படுகிறது.

bigboss 6
bigboss 6
bigboss 6
bigboss 6