Biggboss 7 : வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை தொடர்ந்து புதுப்புது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளை கொடுத்து இல்லத்தரசிகளை தான் கண்ட்ரோலில் வைத்திருக்கிறது. அந்த வகையில் சன் டிவி அடுத்து விஜய் டிவி இருந்து வருகிறது.
விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மற்றும் இல்லத்தரசிகளுக்கும் ரொம்ப பிடித்தமான சீரியல்கள் ராஜா ராணி, தென்றல் வந்து என்னை தொடும், பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே, காற்றுக்கென்ன வேலி, முத்தழகு போன்ற சீரியல்களை நாம் எடுத்து சொல்லலாம் ஒவ்வொரு சீரியலுமே வித்தியாசமாக இருப்பதால் அனைத்தையும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று சீரியல் முடிவுக்கு வர வரவுள்ளதாக தகவல் கிளம்பி உள்ளது அதாவது ஒரு புது நிகழ்ச்சியோ அல்லது சீரியலோ வரும்பொழுது பழைய சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோக்களை முடிவுக்கு கொண்டு வருவார்கள் அது போல தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
இதை குறி வைத்து மூன்று சீரியல்களை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், கண்ணே கலைமானே, காற்றுக்கு என்ன வேலி இந்த மூன்று சீரியலும் முடிவுக்கு வரப்போகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதை பார்த்த ரசிகர்கள் மூணு சீரியலுமே நல்லாத்தான் இருக்கு ஏன் முடிவுக்கு வரப்போகிறது.
இதற்கு எல்லாம் கமலின் பிக்பாஸ் தான் காரணம் எனக்கூறி தனது ஆதங்கத்தை கமெண்ட்களின் மூலம் கொடுத்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் 7 ல் அப்பாஸ், சோனியா அகர்வால், சீரியல் நடிகர்கள், விஜய் டிவி தொகுப்பாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர் இதற்கான அறிவிப்பு விரைவில் வெகுவிரைவில் வெளிவர உள்ளது.