தனது மகளைப் பற்றி சொல்லாதற்கு காரணம் இதுதான்.! உண்மையை உடைத்த ரக்ஷன்.!

rakshan
rakshan

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் தங்களது வாரிசுகளை தாங்கள் இருக்கும்பொழுதே எப்படியாவது ஒரு நிலையான இடத்தில் இருக்க வைத்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் சிலர் தங்களது குழந்தைகளை பற்றி ஒரு இடத்தில் கூட பேசாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர்தான் தொகுப்பாளர் ரக்ஷன் இதுவரையிலும் திருமணமாகி சில வருடங்களாகியும் தனது குழந்தையை பற்றி எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை அதனைப்பற்றி தற்பொழுது பேட்டி ஒன்றில் ஏன் அதனை பற்றி பேசவில்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தான் ரக்ஷன். இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விஜய் டிவியில்  தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.  இதன் மூலம் பிரபலமடைந்த இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமானது  ஆரம்பத்தில் தெரியாது ஆனால் சமீபத்தில் தான் இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்து விட்டதாகவும் ஒரு மகள் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனைப்பற்றி ஏன் இதுவரையிலும் கூறவில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.

அதற்கு அவர் விஜய் டிவியில் பணியாற்றுவதற்கு முன்பே பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியிருக்கிறேன். பிறகு மகேஷ் தொடர்ந்து நிறைய இடங்களில் தனது மனைவியைப் பற்றி பேசி இருக்கிறார். ஆனால் அது எனக்கு பெரிதாக காட்டப்படவில்லை என சொல்கிறார். அதுதான் காரணமென்றும் மேலும் தன்னுடைய மகள் பற்றி பேசிய அவர் அவளைப் பார்க்கும்போது பொறுப்புகள் அதிகமாக இருப்பதாக தோன்றுவதாக மன உருகி பேசியிருக்கிறார்.