என்ன ரொம்ப கொடும படுத்துறாங்க என்னால் முடியவில்லை என கதறி வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்குலின்.!

பொதுவாக ஒருவர் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் விஜய் டிவியை தேர்ந்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏன் என்றால் தொடர்ந்து விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது மேலும் இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஆண் தொகுப்பாளர்களை மிஞ்சுமலவிற்க்கு பெண் தொகுப்பாளர்கள் பலர் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் உதாரணமாக டிடி,பிரியங்கா என இவர்கள் தொகுப்பாளிகளாக இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்கள். இவர்களை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜாக்குலின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் பெரிதாக அழகாகவும் இருக்க மாட்டார் மேலும் இவருடைய குரலும் நல்லா இருக்காது ஆனால் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து கலக்கியிருந்தார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் சின்னத்திரை நடிப்பதை தொடங்கினார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து.இந்நிலையில் திடீரென்று பாதியிலேயே இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் ஆனால் சமீப காலங்களாக இவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சமீப காலங்களாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லை இது குறித்து சமீபத்தில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

அதில் தனது பயிற்சியாளர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார் என்றும் எனக்கு மயக்கம் வருகிறது வாந்தி வருகிறது அப்பயும் எல்லாம் நார்மல்னு சொல்றாங்க என்றும் கதறி இருக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.