தமிழ் சினிமாவில் இருந்து வரும் பல தொலைக்காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நம்பர் ஒன் தொலைக்காட்சிகளில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருப்பது தான் விஜய் டிவி. விஜய் டிவிக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஏகபோக வரவேற்புகள் கிடைத்து வந்த நிலையில் சமீப காலங்களாக டிஆர்பியில் அடி வாங்கி வருகிறது.
அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து டிஆர்பியின் உச்சத்தில் இருந்து வருகிறது எனவே தங்களுடைய டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி அவ்வப்பொழுது மாமா வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் ரீல் ஜோடிகளாக அறிமுகமாகும் பல பிரபலங்கள் ரியல் ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து விஜய் டிவியின் மற்றொரு டாப் சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு ரீல் ஜோடிகளாக அறிமுகமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிக நெருக்கமான காட்சிகள் இடம் பெற்ற நிலையில் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வாறு அடுத்தடுத்து ஏராளமான ரீல் ஜோடிகளாக அறிமுகமானவர்கள் ரியல் ஜோடிகளாக மாறிவரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது சிப்பிக்குள் முத்து சீரியல் பிரபலங்கள் இணைந்துள்ளனர். சிப்பிக்குள் முத்து சீரியலில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனை அடுத்த சமீபத்தில் இருவரும் தங்களுடைய குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் எனவே இவ்வாறு விஜய் டிவி டிஆர்பிக்காக இது போன்ற மாமா வேலை செய்து வருவதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.