பாதியில் நிறுத்தப்பட்ட சீரியலை மீண்டும் அறிமுகப்படுத்தும் விஜய் டிவி.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

vijay tv
vijay tv

கடந்த ஆண்டு டிசம்பர் 20 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாடகம் தான் வைதேகி காத்திருந்தாள். இந்த நாடகம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது அதாவது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2022 பிப்ரவரி 4-ஆம் தேதியன்று நிறுத்தப்பட்டது.

இயக்குனர் சிவா சேகர் என்பவரால் இயக்கப்பட்டு வந்த இந்த நாடகம் ஆரம்பத்தில் பிரஜன் என்பவரை கதாநாயகனாக கொண்டும் சரண்யா என்பவரை கதாநாயகியாக கொண்டும் எடுக்கப்பட்டது இதில்தான் பிரஜன் மற்றும் சரண்யா இருவரும் சின்னத்திரையில் முதன் முதலாக அறிமுகம் ஆனார்கள்.

நாடகம் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கும் போது நடுவில் கதாநாயகனுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், நாடகத்தொடரை விட்டு வெளியேறினார், அதன்பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜபார்வை என்னும் நாடகத்தில் கதாநாயகனாக இருந்த “முன்னா” என்பவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

vaidhegi
vaidhegi

இப்படி நாடகம் அழகாக சென்று கொண்டிருந்தபோது திடீரென நிறுத்தப்பட்டது. நாடகம் எடுக்கப்பட்டு 69 நாட்கள் ஆன பிறகு, அதனுடைய மீதமுள்ள காட்சிகளை தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளது நாடகக்குழு, இந்த நாடகத்திற்கு என்று இருந்த ரசிகர்கள் தற்போது நாடகத்தை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பார்த்து வருகிறார்கள்.

vaidhegi 1
vaidhegi 1

மக்களுடைய மேலும் சில கருத்துகள் என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியால் ஒளிபரப்பபட்டு வந்த “சந்திர நந்தினி” என்னும் வரலாற்றை மையமாகக் கொண்ட தமிழ் ரீமேக் நாடகம் விஜய் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுவிட்டது, இருந்தாலும் மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அந்த நாடகம் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் விருப்பம்.