Vijay tv : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது அதனால் ஒரு சில சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டது இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்த வாரத்தில் அண்ணன் சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
அதேபோல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீரென மர்மமான முறையில் ராதா கொலை செய்யப்பட்டார் இந்த நிலையில் ராதாவை கொலை செய்தது பரமுதான் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் நேற்றைய புரோமோவில் ராதாவை கொலை செய்தது கண்மணி தான் என தெரியவந்தது.
அதேபோல் பரமுவாக நடிக்கும் இந்த சீரியலின் நாயகன் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் தென்றல் வந்து என்னை தொடும் முடிவடைந்தது என்பது போலவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் நடித்து வரும் காட்சிகள் முடிவுக்கு வந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தாலி சென்டிமென்டால் பெரும் சர்ச்சையோடு தொடங்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் வெற்றிக்கு தற்பொழுது தன்னுடைய குழந்தை பற்றி தெரிந்து விட்டது அபிக்கு மட்டும்தான் வெற்றிக்கு உண்மை தெரிந்து விட்டது என்பது தெரியவில்லை அதேபோல் எல்லா குழப்பத்திற்கும் காரணம் கண்மணி என்பதும் தெரிந்து விட்டது.
இன்னும் ஒரு சில எபிசோடு இருக்கிறது என கூறப்படுகிறது இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது, ஏனென்றால் குடும்பம் மொத்தமாக ஒன்று இணைந்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் ஜெயிலில் இருந்த கதிர் ஜீவா இருவரும் வெளியே வந்து விட்டார்கள் அதனால் இந்த சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது இதனால் தென்றல் வந்து என்னை தொடும் பாண்டிய ஸ்டோர் இரண்டு சீரியல்களும் முடிய இருக்கிறது.