தொடர்ந்து 4 மெகா ஹிட் சீரியல்களை ஒரே மாதத்தில் நிறுத்தப் போகும் விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

vijay tv
vijay tv

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்த வரும் நிலையில் தற்போது ரசிகர்களின் நான்கு ஃபேவரட் சீரியல்களை அடுத்தடுத்து நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விஜய் டிவி டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யை எதிர வைத்த சீரியல்களை விரைவில் முடிக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

அந்த வகையில் மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர். அதாவது தற்பொழுது விஜய் தொலைக்காட்சிகளில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கு என்ன வேலி, தமிழன் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என நான்காவது தொடர்களையும் ஜூன் மாதம் நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நான்கு சீரியலும் தற்பொழுது பரபரப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது என்றுதான் கூற வேண்டும் அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகுத்து வரும் சீரியல்களும் இந்த நான்கு சீரியல்தான் இவ்வாறு திடீரென இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் பேட்டியின் பொழுது தற்பொழுது பிரிந்து இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகளும் மீண்டும் இணைந்து மகிழ்ச்சியாக வாழும் பொழுது இந்த சீரியல் நிறைவடையும் என கூறியிருந்த நிலையில் ஜூன் மாதம் நிறைவடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.