சின்னத்திரையில் தனது குழந்தை தனத்தால் தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வரும் நடிகை தான் சிவாங்கி இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதன் பின்பு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவர் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆவதற்கு தனது குழந்தை தணத்தாலும் தனது மெல்லிய குரலை வைத்து மக்களை கவர்ந்து விட்டார்.
மேலும் இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தொகுப்பாளராக பணிபுரிய வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு நீண்ட நாள் இருக்கிறதாம் அதன்படி அவரது ஆசை தற்பொழுது நிறைவேற உள்ளது என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஆம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அவர் இருந்த இடத்தில் சிவாங்கி தற்பொழுது தொகுப்பாளராக தொகுத்து வழங்கப் போகிறார் என செய்திகள் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.அதனை உறுதி செய்யும் வகையில் சிவாங்கியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுப்பாளர் சிவாங்கி என்ற புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
அதே போல் இவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்பொழுது விஜய் டிவி தீவிர ரசிகர்கள் கேட்பது என்னவென்றால் எதற்காக இந்த நிகழ்ச்சியை டிடியை வைத்து தொகுத்து வழங்க கூடாது.
டிடி ஒரு பிரபலமான தொகுப்பாளர் தான் என கூறி வருகிறார்கள் அதேபோல் இந்த நிகழ்ச்சியைத் இவரும் தொகுத்து வழங்கினால் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் எதற்காக விஜய் டிவி நிறுவனம் இப்படி செய்கிறது என்பது தெரியவில்லை என பலரும் கூறி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் விஜய் டிவி நிறுவனத்திற்கும் டிடிக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா பின்பு எதற்காக இப்படி செய்கிறார்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் சிவாங்கி தொகுத்து வழங்கினாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.