விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் தற்போது இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் அது குறித்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த சீரியலில் தற்பொழுது ராகினியின் திருமண எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் நிலையில் ராகினி திருமணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் குழப்பங்கள் நடந்தது. ராகினி அர்ஜுன் திருமணத்திற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சந்தோஷமாக கல்யாணம் ஏற்பாடுகள் நடைபெற்றது ஆனால் திடீரென கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என பெண் ஒருவர் அர்ஜுன் மீது புகார் சொல்கிறார்.
எனவே அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த பெண் சரியானவள் கிடையாது என அனைவருக்கும் தெரிய வருகிறது இதனை தமிழும் சரஸ்வதியும் இணைந்து கண்டுபிடித்து விடுகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ராகினி அர்ஜுனின் கல்யாணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் கல்யாண நாள் அன்று அர்ஜுன் அந்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பது போல வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதில் கல்யாணம் நின்று போக தமிழின் அப்பா ஆதியை தாலி கட்ட சொல்கிறார் ஆதி தாலி கட்ட போகும் நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் அர்ஜுனை அழைத்து வருகின்றனர். அர்ஜுன் என்னை கடத்தி வைத்ததால் தான் நான் இப்படி வீடியோ வெளியிட்டேன் என சொல்கிறார். இவ்வாறு இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆதி தான் காரணம் என சொல்ல பிறகு ஆதி உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் போலீசார்கள் ஆதியை கைது செய்கின்றனர் பின் ராகினி அம்மா அர்ஜுனனின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார் எனவே பல பிரச்சினைகளுக்கு பிறகு அர்ஜுன் ராகினின் கழுத்தில் தாலி கட்டுகிறார் ஜெயிலுக்கு சென்று ஆதி எப்படியாவது தமிழ் சரஸ்வதியை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.