விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் முக்கியமாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் டிஆர்பியில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.
அப்படி குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் சரஸ்வதி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புதிய கம்பெனி திறந்து உள்ளனர்.
தமிழின் அம்மா சரஸ்வதியிடம் பேசவில்லை என்றாலும் கார்த்தியின் மனைவி வசுந்தரா மிகவும் அன்பாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சரஸ்வதி இருவரும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் வசுந்தராவின் அம்மா சந்திரகலா ஆவார்.
அவரும் இவர்களை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என பல திட்டங்களை செய்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வசுந்தரா நிறைமாத கற்பனையாக இருக்கும் நிலையில் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விடுகிறார்.
எனவே அப்பொழுது சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வசந்தரா கத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் வீட்டிற்கு வந்து வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு மருத்துவர்கள் ரத்தம் வேண்டும் என கூறுகின்றனர் சரஸ்வதி உடனே நான் ரத்தம் தருவதாக கூற இதனால் வசந்த்ரா மற்றும் அவருடைய குழந்தை இருவரும் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.
எனவே மருத்துவர் இவர்களிடம் நேரத்திற்கு வந்து சேர்த்து ரத்தம் கொடுத்த அவருக்கு நன்றி கூறுங்கள் என சந்திரகலாவிடம் கூற அவரும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்கிறார் இதனை பார்த்த கோதை கண்கலங்க பிறகு கார்த்தி கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.