விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியலில் தற்பொழுது தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தமிழ் சரஸ்வதி இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு ரோகினியின் கணவர் அர்ஜுன் எப்படியாவது அந்த வீட்டில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டு சொத்துகளை ஆட்டையை போட வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.
எனவே இவர் செய்யும் அனைத்து வேலைகளும் தமிழுக்கு தெரியவரும் நிலையில் அர்ஜுனை வெறுக்கிறார் ஒரு கட்டத்தில் அர்ஜுன் தமிழ் தன்னை கத்தியால் குத்துவது போன்ற நாடகம் ஒன்றை உருவாக்கிய நிலையில் கோதை மற்றும் மற்றவர்களால் தமிழை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தமிழும், சரஸ்வதியும் சொந்தமாக புதிய கம்பெனி ஆரம்பித்து இருக்கும் நிலையில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் அப்பொழுது முதியவர்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று உணவு அளிக்கின்றனர். அதே இடத்தில் கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் அனைவரும் வருகிறார்கள். இந்நிலையில் முதியவர் இல்லத்தை நடத்தி வரும் ஓனர் கோதையிடம் நீங்க நல்லா வாழ்ந்தவங்க எனவே இவர்களுடைய திருமண நாளை வாழ்த்துங்கள் என கூறுகிறார்.
பிறகு தமிழும் சரஸ்வதியும் கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். இதனை எல்லாம் பார்த்த அர்ஜூன் மீண்டும் கோதை தமிழுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடேசனுக்கு அர்ஜுன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அந்த கத்தியால் குத்திய வீடியோவை பார்ப்பதற்காக ஆரம்பிக்கிறார்.
இதனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்துக் கொண்ட அர்ஜுன் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணி அர்ஜுனை வாக்கிங் செல்ல கூப்பிடுகிறார். அதற்கு அர்ஜுன் உங்க அப்பாவை அழைச்சிட்டு போ எனக் கூற பிறகு நடேசன் ரோகினி இருவரும் வாக்கிங் செல்கின்றனர்.
இந்த நேரத்தில் அர்ஜுன் நடேசன் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்து விடுகிறார் மேலும் அர்ஜுனனின் சட்டையில் இருந்த பட்டன் அருந்து கீழே விழுந்து விடுகிறது. அந்த பட்டனை நடேசன் கையில் எடுத்து வைத்திருக்கும் நேரத்தில் ரோகினி சட்டையில் இருந்த பட்டன் எங்கே என்று கேட்க இந்த பட்டனா பாரு என நடேசன் கூறுகிறார் ஆமாம் என ரோகிணி சொல்ல அவருடைய சந்தேகம் உறுதியாகிறது. இதோ அந்த ப்ரோமோ..