அர்ஜூனின் சூழ்ச்சியினால் மகனிடமே மல்லுக்கட்டும் கோதை.. உயிரே போனாலும் ஜெயிக்கணும்….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் கோதை தமிழ் இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அசோசியேஷன் எலக்சன் நடைபெற உள்ளது.  அர்ஜுனின் சூழ்ச்சி வலையில் சிக்கி அம்மாவிற்கு எதிராகவே தேர்தலில் நிற்கிறார் தமிழ். இதனை அறிந்த கோதை மிகவும் கோபத்தில் உள்ளார்.

இதனால் குடும்பத்தில் அனைவரும் தமிழுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கோதையை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என வெறியுடன் உள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து நமச்சி தமிழ் வீட்டு வேலைக்கார பொண்ணு அபியை நினைத்து வருந்துகிறார். இந்த சூழலில் நமச்சி சோகமாக உள்ளார் அப்போது இதனை அறிந்த  தமிழும் சரஸ்வதியும் உன் மனதில் உள்ள காதலை சீக்கிரமாக அபி இடம் தெரியப்படுத்து என கூறுகின்றனர்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது தமிழ், சரஸ்வதி, நமச்சி மூவரும் எலக்சனுக்காக நாமினேஷன் செய்ய சென்றிருக்கிறார்கள். செய்துவிட்டு வெளியில் வர இவர்களை தொடர்ந்து கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் ஆகியோர்களும் நாமினேஷன் செய்கிறார்கள் பிறகு வெளியில் வந்தவுடன் கோதை தமிழையும் சரஸ்வதியும் எதிரி போல் முறைத்து பார்க்கிறார்.

பிறகு வீட்டிற்கு சென்றவுடன் என்ன ஆனாலும் சரி இந்த எலக்சன்லில் ஜெயித்தே ஆக வேண்டும் அப்படி ஜெயிக்கவில்லை என்றால் என் உயிர் போறதுக்கு சமம் என் நேர்மைக்கு பரீட்சை வைத்திருக்கிறான் எனவே ஜெயிச்சு ஆக வேண்டும், எழுத்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு அவனுக்கு காமிக்க வேண்டும் என மிகவும் கோபமாக கூற  இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு கோதை தமிழை எதிரியாக நினைத்து எலக்ஷனில் தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதை பார்த்து அர்ஜுனனின் குடும்பத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.