தமிழ் வைத்த ஆப்பை பார்த்து அதிர்ந்து நின்ன கோதை குரூப்… யார் ஜெயிப்பார் பரபரப்பான போட்டியுடன் தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். அசோசியேஷன் எலக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தமிழும் கோதையும் எதிரெதிராக நிற்கிறார்கள். எப்படியாவது கோதை இந்த எலக்ஷனில் வெற்றி பெற வேண்டும் எனவும் அப்படி தோற்றுவிட்டால் என்னுடைய உயிர் போவதற்கு சமம் எனவும் கூறியிருக்கிறார்.

எனவே அர்ஜுன், கார்த்தி இருவரும் கோதை ஜெயிப்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழும் நமச்சி, சரஸ்வதி துணைவுடன் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதனை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அசோசியேஷனுக்கு பில்டிங் கட்டி தருவதாக தமிழ் வாக்குறுதி கொடுத்திருந்தார் இதனை தெரிந்துக் கொண்ட கோதை பில்டிங் கட்டுவதற்காக மொத்த பணத்தையும் தந்திருக்கும் நிலையில் இதனை மற்ற நபர்களும் ஆதரித்து பாராட்டுகிறார்கள். இதனை ஆபிஸர் மூலம் தெரிந்துக் கொண்ட தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

எனவே கோதையின் இந்த பிளானை மாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய பிளான் ஒன்றை போட அதற்கு அனைவருர் மத்தியிலும் பாராட்டு கிடைக்கிறது. அதாவது அசோசியேஷன் மீட்டிங்கில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க இந்த நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் வருகிறார்கள். அப்பொழுது ஒரு தனி நபர் கொடுத்தால் அது தானமாக தான் இருக்கும் எனக் கூற அதற்கு சரஸ்வதி நம்ம அசோசியேஷனில் 300 பேர் இருக்காங்க ஒவ்வொருத்தங்களும் 40 ஆயிரம் கொடுத்தால் 1 கொடியே 70 லட்சம் ரூபாய் வரும் என சொல்கிறார்.

அதற்கு நமச்சி அந்த பணத்தை வச்சி நம்ப சங்கத்துக்கு இதைவிட பிரம்மாண்டமான கட்டடம் கட்டலாம் இது என்னுடைய பங்கு என தமிழ் 40,000 கொடுக்கிறார் எனவே இது அனைத்து நபர்களுக்கும் பிடித்து விட பாராட்டுகிறார்கள் இதனால் கடுப்பான கோதை வாங்க நம்ம போகலாம் என அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.