படையப்பா பாடலுடன் வெற்றி வாகை சூடும் தமிழ்.! கோதைக்கு இப்படி ஒரு நிலைமையா.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடர்ந்து பரபரப்பான எபிசோடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அசோசியேஷன் எலக்சன் நடைபெற்ற நிலையில் அதில் தமிழும் கோதை எதிர எதிராக இன்றைய போட்டி போட்டுக் கொண்ட நிலையில் பரபரப்பான எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் கோதை தமிழை எப்படியாவது தோற்கடித்து இந்த எலக்ஷனில் தான்தான் வெற்றி பெற வேண்டும் என தனது குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில் இதற்காக அனைவரும் முயற்சி செய்து வந்தார்கள். மேலும் தமிழினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன், கார்த்தி இருவரும் குறுக்கு வழியில் பல கேவலமான வேலைகளை செய்தும் அனைத்து பிரச்சனைகளையும் உடைத்து தற்பொழுது தமிழ் எலக்ஷனில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இது மிகப்பெரிய மகிழ்ச்சியினை தந்துள்ளது. அர்ஜுன், கார்த்திக் இருவராலும் தமிழ் இந்த எலக்ஷனில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் படையப்பா பாடலுடன் தமிழ் வர அங்கு இருக்கும் ஆபிஸர்கள் கையை கொடுத்த வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்.

அதற்கு தமிழும் தேங்க்ஸ் என கூறி வரும் நிலையில் இந்த நேரத்தில் கோதை, நடேசன், தமிழ், கார்த்தி நான்கு பெரும் வர அர்ஜூன் தமிழைப் பார்த்து முறைக்கிறான். அப்பொழுது கோதை தன்னிடம் இருந்த பூங்கொத்தை தமிழுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் என கை கொடுக்கிறார்.

அதற்கு நன்றி கூறுகிறார் தமிழ். இதனை அடுத்து ஆபிசர் ஒருவர் முன்னாள் தலைவர் என்ற முறையில் நீங்களே அழைச்சிட்டு போய் தலைவர அவருடைய சாரில் உட்கார வைங்க என கூற பிறகு கோதையும் தமிழைச் சேரில் உட்கார வைக்கிறார். இதனை அனைத்தையும் பார்த்து நடேசன், சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைய மற்ற கார்த்தி அர்ஜுனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.