கோவிலில் அனைவரும் முன்பும் கோதையை அசிங்கப்படுத்திய தமிழ்.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கார்த்தி..

thamizhum-saraswathiyum-190
thamizhum-saraswathiyum-190

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் சரஸ்வதி கோவிலுக்கு செல்ல அங்கு நடேசன் கோதையும் கோவிலுக்கு வருகிறார்கள்.  வசுவிடம் பேசுவதை தெரிந்து கொண்ட கோதை உன் புருஷன் தான் இந்த குடும்பத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு போய்ட்டால நீ எதுக்கு வசு கிட்ட பேசுற.

வசு தைரியமா எல்லாத்தையும் எடுத்து சொல்ற பொண்ணுதான் ஆனா இப்ப என்னையே எழுத்து பேசுற அளவுக்கு வந்துடுச்சு அவளுக்கு நீ சொல்லி தரியா குடும்பத்தை பிரிக்கலாம்னு  பாக்குறியா என கேட்க எப்படி அத்த நான் அந்த குடும்பத்தை பிரிக்கணும்னு நினைப்பேன் என சரஸ்வதி கூறுகிறார் என்னது அத்தையா என்ன புதுசா உறவு கொண்டாடிக்கிட்டு வர உனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகிறார்.

இவ்வாறு கோதை கோவிலில் கத்துவதை அனைவரும் பார்க்கிறார்கள் ஒரு கட்டத்தில் தமிழ் உங்க குடும்பத்துக்கும் இவளுக்கும்தான் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டீர்களே அப்புறம் எந்த உரிமையில் அவளை கேள்வி கேட்கிறீங்க அவ உங்க குடும்பத்தை கெடுக்க பார்த்தாளா கொஞ்சமா மனசாட்சி இருக்கா உங்க மருமகளையும், பேரபிள்ளையையும் காப்பாற்றியது இவதான் என கூறுகிறார்.

அப்ப உங்களுக்கு நல்லவளா தெரிஞ்சா இப்ப நல்லவளா தெரியலையா? நான் சொல்றதையும் மீறி உங்க குடும்பத்துக்கு இவ நல்லது தான் செஞ்சிருக்கா உங்களுக்கெல்லாம் சரஸ்வதியை பேச தகுதியே இல்லை எங்களுடைய பிசினஸ் யாரால் வீணா போனதுன்னு உங்களுக்கு தெரியும் எனவே முதல உங்க வீட்டுல இருக்குற பிரச்சனையை சரி பண்ணுங்க எனக்‌கூற கோதை கோபப்படுகிறார்.

ஏய் எனக் கூற அதற்கு தமிழ் பேச விடாமல் சரஸ்வதி பேசுவா உங்க வீட்ல இருக்குற ஆளுங்கள வேணாம் பேசாம இருக்க சொல்லுங்க என கூறிவிட்டு அழைத்து செல்கிறார். இவ்வாறு சப்போர்ட் செய்து பேசினாலும் கோபம் குறையாது தமிழ் எனக்கு வேலை இருக்கு நீ ஆட்டோ புடிச்சு போ என சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு கிளம்ப சரஸ்வதி கவலைப்படுகிறார்.

இவ்வாறு சரஸ்வதி மேல் தமிழ் கோபமாக இருக்கும் நிலையில் அதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தமிழின் நண்பர் வெளியில் அழைத்து சென்று ஒவ்வொரு கடையாக காமித்து இந்த வேகாத வெயிலிலும் பெண்கள் அனைவரும் வியாபாரம் செய்து கொண்டு  இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு பெண் வேலை செய்வதையும் காமிக்க அதற்கு அது எல்லாம் எனக்கு தெரியும் ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்ற என தமிழ் கேட்கிறார்.

இவ்வாறு பெண்கள் அனைவரும் நம்பலை விட அதிகமா எல்லா இடத்திலும் வேலை செய்றாங்க அவங்க ஆம்பளங்கள் கிட்டயும் பேசுற நிலைமை ஏற்படும் எனவே அதில் சில லூசுங்க தப்பா தான் பேசும் பெண்கள் அனைவரும் இங்கேயும் வேலை செஞ்சிட்டு வீட்லயும் வந்து வேலை செய்யணும் அப்ப நா பேசுறவங்க மேல தப்பு இல்ல வேலைக்கு போறவங்க மேல தான் தப்பா என கேட்கிறார்.

இவ்வாறு தமிழ் சரஸ்வதியின் மீது கோபப்படுவதை தவறு என அவருடைய நண்பர் புரிய வைத்திருக்கும் நிலையில் மறுபுறம் கோதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் வரவைத்து நம்மளுடைய வீட்டிலும் கம்பெனியிலும் அதிக நெருக்கடி வந்திருக்கு எனவே இதையெல்லாம் சரி செய்ய நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.

உனக்கு சொல்லித் தருவதற்காக தான் கம்பெனிக்கு வந்தோம் என நடேசன் கூற பிறகு கோதை கம்பெனி மேல இருக்குற டென்ஷனை எதற்கு வசு மேல காமிக்கிற காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவுங்க தான உங்களுக்கு ஒரு உறவு புதுசா பொறந்திருக்கு நீதான கார்த்தி குழந்தையையும் வசுவையும் கிட்டக்க இருந்து அக்கறையா பார்த்துக்கணும்.

இன்னைக்கு கோவிலுள்ள அவ பொண்டாட்டிய ஒரு வார்த்தை பேசினதுக்கு அப்படி சத்தம் போடுகிறான் அவங்களுக்குள்ள இருக்குற அன்யூனியம் ஏன் உங்களுக்கு இல்ல உனக்காக எல்லாத்தையும் எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டவ தான் வசு. உன்ன தெரிஞ்சுக்கோ பிசினஸ்ல நீ எவ்வளவு பெருசா சாதிச்சாலும் கடைசி வரைக்கும் உன்கூட இருக்க போறது வசு மட்டும்தான்.

அவள நீ சந்தோஷமா பாத்துக்கலான எவ்வளவு ஜெயிச்சாலும் அது உதவாது நடேசன் சொல்கிறார் பிறகு இதனை அடுத்து கோதை மாப்பிள்ளை உங்களை கம்பெனி விஷயத்துல திட்றன்னு உங்களுக்கு கோபம் வரலாம் இந்த வயசுல கண்டிப்பாக வரும் ஏன் என்னுடைய மகளை என்ன எதிர்த்து பேசுறாளே. கார்த்தி உங்க ரெண்டு பேத்துக்கும் நான் மரியாதை இல்லாமல் போகணும்னு நினைக்கலப்பா உங்க திறமை மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் எங்களுடைய ஆலோசனையை கேட்டுக்கிட்டா அது உங்களுக்கு தானப்பா நல்லது.

நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே கம்பெனிக்கு வர போறேன் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் கூட எனக்கு தெரியாது என கோதை கூற அதற்க்கு கார்த்தி சாரி என காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். பிறகு வசுவிடம் எந்த கோபத்தையும் காட்டாத எனக் கூற பிறகு கார்த்தி வசுவிடமும் மனிப்பு கேட்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.