எதிர்பாராத விதமாக தமிழையும் சரஸ்வதியையும் சந்தித்து முதல் திருமண நாளிற்காக ஆசீர்வாதம் செய்த கோதை.! வஞ்சத்தை விதைக்கும் மாப்பிள்ளை.. அனைத்தும் ஆண்டவன் செயல்

thamizhum-saraswathiyum-1
thamizhum-saraswathiyum-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடில் காலையில் எழுந்தவுடன் கார்த்தி ஆஃபீஸ்காக செல்லும் நிலையில் அதற்கு அவருடைய அப்பா இப்பொழுது போக வேண்டாம் மதியமாக போய்க்கலாம் என கூறுகிறார். ஏன் என கேட்க அதற்கு வசுந்தரா இன்னைக்கு தமிழும் சரஸ்வதியும் முதல் வெட்டிங் டே எனக் கூற உடனே ரோகினி எதற்கு தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுறீங்க என கத்துகிறார்.

கார்த்தியின் அப்பா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது நான் சொல்ல வரத்துக்குள் நீங்களே அது இதையும் சொல்றீங்க அதாவது இன்னைக்கு கோதை நெஞ்சு வலியால் மருத்துவமனைக்கு சென்று பிறகு டாக்டர் எந்த ஒரு ரு பிரச்சனையும் இல்லை என கூறிய நாள் எனவே நான் ஜோசியரை பார்த்து ஏதாவது கோவிலில் ஏதாவது பரிகாரம் செய்யலாமா என கேட்டேன் அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் இதற்காக முதியவர்கள் ஆசிரமத்தில் உணவு அளிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

பிறகு கார்த்தி, கோதையின் மாப்பிள்ளை, கோதை, கார்த்தியின் அப்பா அனைவரும் ஆசிரமத்திற்கு செல்கின்றனர். அங்கு சென்று அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் அதே ஆசிரமத்திற்கு வருகிறார்கள் இதனை பார்த்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அங்கிருக்கும் ஆசிரமத்தை நடத்துபவர் இவர்தான் கோதை பெரிய பிசினஸ்மேன் என கூற அதற்கு அது எல்லாம் அறிமுகம் தேவையில்லை இவங்கள பத்தி தெரியாத ஆளே கிடையாது என கூறுகிறார்கள்.

பிறகு நீங்கள் பரிமாறும் இடம் பக்கத்தில் இருப்பதாக கூறிவிட்டு தமிழையும் சரஸ்வதையும் அழைத்துச் செல்ல  கார்த்தியின் அப்பா இப்பல்லாம் பாத்தியா நம்ப தமிழை அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என கூறி மகிழ்ச்சி அடைகிறார். பிறகு கார்த்தி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க கிளம்புங்கம்மா நாங்க பார்த்துக்கிறோம் என கூற அதற்கு கார்த்தியின் அப்பா நல்ல காரியத்தை பாதியிலேயே விடக்கூடாது என சொல்கிறார்.

அதன் பிறகு தமிழும் சரஸ்வதியும் மிகவும் மகிழ்ச்சியுடன் பரிமாறுகிறார்கள். முதியவர்கள் அனைவரும் சாப்பாடு நன்றாக இருந்ததாக கூற பிறகு சரஸ்வதி இன்னைக்கு எங்களுடைய கல்யாண நாள் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் எனக் கூறி காலில் விழ அனைத்து முதியவர்களும் பூ தூவி ஆசீர்வாதம் செய்கிறார்கள். பிறகு அந்த ஆசிரமத்தின் ஓனர் கோதை வருவதை பார்த்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்கம்மா என கோதையிடம் அழைத்துச் சென்று அம்மா நீங்க நல்லா வாழ்ந்தவங்க இவங்களுக்கு இன்னைக்கு திருமண நாள் நீங்க வாழ்த்துனா நல்லா இருக்கும் என கூற பிறகு கோதை தமிழின் அப்பா இருவரும் இணைந்து இருவரையும் நல்லா இருக்குமாறு வாழ்த்துகிறார்கள்.

பிறகு தமிழ் சரஸ்வதியை அழைத்துக் கொண்டு செல்கிறார். இவ்வாறு என்ன இந்த அம்மா உடனே ஆசீர்வாதம் செஞ்சிடுச்சு உட்டா சேர்ந்திடுவாங்க போலையே என ரோகிணியின் கணவர் மனதிற்குள் நினைக்கிறார். இவ்வாறு தனது மாமனார் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டதால் சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.