பூஜை ரூமில் சரஸ்வதியை விளக்கேற்ற சொன்ன கோதை.! வைத்தெரிச்சலில் சந்திரலேகா..

thamizhum-sarasvathiyum-serial
thamizhum-sarasvathiyum-serial

விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் இருந்து வருகிறது. இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வருகிறது.

இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக விஜே தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் நடித்து வருகிறார்கள். இருவருமே குறைவாக படித்து உள்ள நிலையில் எப்படி தங்களது வாழ்வில் நடக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் அமைந்துள்ளது.

தமிழ் சரஸ்வதி படித்து இருப்பதாக பொய் கூறி திருமணம் செய்து கொண்டார்கள் திருமணம் முடியும் என்று சந்திரலேகா அனைவர் முன்பும் சரஸ்வதி படிக்காததை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக கோதை மிகவும் கோபமாக இருந்து வந்ததால் தமிழையும் சரஸ்வதியையும் குடும்பத்தில் இருந்து தள்ளி வைத்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நிறுவனத்தில் தனது கணவரின் ஜிஎம் போஸ்டை மீட்டு தரவேண்டும் என பல முயற்சிகளைச் செய்கிறார் சரஸ்வதி. இதனை அடுத்து 1000 மெட்டிரீயல்களை செய்வதற்கு பல முயற்சிகளுக்குப் பிறகு தமிழும் சரஸ்வதியும் பெறுகின்றனர். அடுத்த நாள் 10 மணிக்குள் முடிக்க வேண்டுமென ட்விஸ்ட் வைக்கின்றனர்.

இதன் காரணமாக அந்த ஆடரை முறியடிக்க வேண்டும் என்பதற்காக கார்த்திக் மற்றும் சந்திரலேகா இருவரும் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டார்கள். என்னதான் இவர்கள் பிளான் போட்டாலும் எப்படியோ அந்த ஆர்டரை வெற்றிகரமாக முடித்து விடுகின்றனர்.

இதன் காரணமாக தற்பொழுது தமிழையும் சரஸ்வதியையும் கோதை ஏற்றுக்கொள்வார். மேலும் வீட்டில் சாமி கும்பிடுவதற்காக சரஸ்வதியை முதன் முறையாக விளக்கேற்ற கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் சந்திரலேகா வைத்தெரிச்சலில் இருக்கிறார்.