விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஒளிபரப்பாகி வரும் சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.
பல பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தை பிரிந்த தமிழ் எப்படியாவது சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். எனவே சாப்பிடுவதற்கு கூட தமிழும் சரஸ்வதியும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சரஸ்வதி தான் வேலைக்கு போவதாக கூறுகிறார் ஆனால் தமிழ் சரஸ்வதி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக புதிய கம்பெனியை தமிழ் நாளைக்கு ஓபன் செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அர்ஜுன் வழக்கம் போல் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்பெனியை திறக்க விடக்கூடாது என கூறுகிறார். அதேபோல் அந்த ஆபீஸ் வரும் நாளைக்கு கம்பெனி திறக்க முடியாது அப்படி திறந்தால் சீல் வைத்து விடுவதாக மிரட்ட இந்த நேரத்தில் மினிஸ்டர் தமிழை பார்த்து விடுகிறார்.
பிறகு அவர் ஆஃபீஸரை சந்தித்து இவர் நமக்கு வேண்டிய தம்பி எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனக் கூற உடனே அந்த ஆபிசர் சைன் போட்டு சொல்ல இதனால் அர்ஜுன் அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் கம்பெனி திறப்பு விழாவை பற்றி மினிஸ்டரிடம் கூற என்னலாம் கூப்பிட மாட்டியா என கேட்க அதற்கு கண்டிப்பாக வாங்க சார் நாளைக்கு நீங்கதான் திறந்து வைக்கிறீங்க என கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அந்த மினிஸ்டர் வரும்போது சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வரும் நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது அம்மா மேல் கோபமாக இருந்தாலும் சரஸ்வதி என்ற பெயரை வைப்பாரா? என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
கம்பெனி பெயர் என்னவா இருக்கும்னு Comment ல சொல்லுங்க.. 😉
தமிழும் சரஸ்வதியும் – திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ThamizhumSaraswathiyum #VijayTelevision pic.twitter.com/nTWCobRHLr
— Vijay Television (@vijaytelevision) April 10, 2023