சுமார் 6 விருதுகளை தட்டித் தூக்கிய ஒரே சீரியல்.! இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.

vijay tv 1
vijay tv 1

பாக்கியலட்சுமி என்ற பெயரைக் கேட்டால், அனைவருக்கும் நினைவில் வருவது ஒன்றே ஒன்றுதான் அது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் தான். பாரதி கண்ணம்மாவிற்கு அடுத்தது நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நாடகம் என்றால் பாக்கியலட்சுமி தான்,ஏனென்றால் இதில் கோபி செய்யும் வேலை அப்படி.

இக்கதையில் கோபி என்பவர் திருமணமான தனது மனைவி இருக்கும் பொழுது இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள விரும்புவார். தனது மனைவிக்கு தெரியாமல் தனது காதலியின் வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வருவார்.இதனை அறிந்த கோபியின் தந்தை என்னதான் மகன் தப்பு செய்தாலும் அதை விட்டு விடாமல் அவனை அதிலிருந்து திருத்த வேண்டும் என்று விடாமுயற்சி செய்வார்.

மேலும் அதனை யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பார் இக்கதாபாத்திரம் மிகவும் அழகானதாக இருக்கும். இதனை நெட்டிசன்கள்,காத்துவாக்குல ரென்டு காதல் என்னும் படத்தில் வரும் பாடலோடு கோபியை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பல செய்திகளை வெளியிட்டார்கள்.

ஆனாலும் விஜய் டிவியால் நடத்தப்படும் விஜய் டிவி விருதுகள் நிகழ்ச்சியில் இந்த நாடகமே மிக அதிக விருதுகளை பெற்றது. சிறந்த தந்தைக்கான விருது கோபியின் தந்தை ராமமூர்த்தி பெற்றார்,சிறந்த வில்லனுக்கான விருது கதாநாயகன் கோபி பெற்றார், சிறந்த நடிகைக்கான விருதை இத்தொடரின் கதாநாயகி பாக்கியா பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை எழிலும்,சிறந்த துணை நடிகைக்கான விருதை ராதிகாவும் பெற்றார்.

இத்தனை அவார்டுகளை பெரும் என்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். உண்மையில் கதை அவ்வளவு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். என்னவாக இருந்தாலும் கோபி வில்லனாக மாறியது ரசிகர்களிடையே சிறிது கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்தொடரை இயக்கிய இயக்குநர் டேவிட் என்பவருக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது.