தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே தொடர்ந்து வாரம் தோறும் இந்த இரண்டு தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வகையில் படங்களை விட சீரியலுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது தொடர்ந்து.
ரசிகர்கள் விரும்பும் வகையோடு புதிய சீரியல் அறிமுகப்படுத்தி வருகிறார். இவ்வாறு எந்தெந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்பதனை டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 விடத்தை பிடித்திருக்கும் சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
இந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்து இருக்கும் சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல். ஆதிரையின் திருமணம் பல பிரச்சனைகளுக்கு இடையே நடைபெற்று இருக்கும் நிலையில் அடுத்தடுத்து குணசேகரன் பல திட்டங்களை போட்டு வருகிறார். அந்த வகையில் இதற்கு மேல் எப்படி அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட போகிறார் என்பதையும் இதனை மருமகள் எப்படி தடுக்க போகிறார்கள் என்பதனையும் வைத்து ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் பெண்ணாகப் பிறந்து வீட்டில் இருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்துக் கொண்டு பொறுப்புடன் பிரச்சனைகளையும் சமாளித்து விதமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் பிடித்துள்ளது. இவ்வாறு ஹீரோயின் தனது சொந்த விருப்பத்தை விட்டுவிட்டு தொடர்ந்து தனது குடும்பத்திற்காக யோசித்து வருவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அடுத்ததாக 3வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்தான் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து தனது இரண்டாவது மனைவியுடன் மீண்டும் தனது வீட்டில் குடியேறி இருக்கும் நிலையில்அவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் தனது குடும்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் போராடி வருகிறார்.
4வது இடத்தை பிடித்திருக்கும் சீரியல் சன் டிவியின் சுந்தரி சீரியல் கலெக்டராக வேண்டும் என லட்சியத்தோடு இருந்து வரும் சுந்தரியை வைத்து பல எபிசோடுகளாக இதனை உருட்டி வருகிறார்கள். 5வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச உறவினையை எதார்த்தமாக வெளிப்படுத்தி வரும் வானத்தைப்போல சீரியல் பிடித்துள்ளது. இவ்வாறு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலை தவிர வேறு எந்த விஜய் டிவி சீரியலும் இடம்பெறவில்லை சன் டிவி டிஆர்பி யில் தனது ஆக்கிரமிப்பை செலுத்தி வருகிறது.