விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படியாவது முத்து மீனாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி போராடி வருகிறார். அண்ணாமலை முத்து மீனாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருவதனால் தனது அம்மாவின் மூலம் சேர்த்து வைத்து விடலாம் என்பதற்காக கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
பாட்டியும் இவர்களை கோவிலுக்கு அனுப்புகிறார் மேலும் பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் இருந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. இவ்வாறு மீனாவும் பாட்டியிடம் நான் என்னதான் செய்தாலும் அவருடைய மனம் மாறவே மாட்டேங்குது எனக் கூறி வருத்தப்பட இந்த ஊரில் இருந்து கிளம்புவதற்குள் நான் அவனை மாற்றுகிறேன் என பாட்டி சொல்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் முத்துவின் அம்மா தனது பெரிய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக நகைகள் மற்றும் பணத்தை வாங்குவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது மாமியாரின் மனதில் இடம் பிடிப்பதற்காக தொடர்ந்து அனைவர் மேலும் பாசமாக இருப்பது போலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தும் வருகிறார்.
இதனை எல்லாம் பார்த்த முத்துவுக்கு அதிர்ச்சி ஆகிறது அம்மா இப்படிப்பட்ட ஆளே கிடையாது ஏன் இப்படி செய்கிறார்கள்? கண்டுபிடிக்க வேண்டும் என புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாட்டி கோவிலுக்கு சென்று ஜோசியர் ஒருவரிடம் அவங்களுக்குள் நடக்கிற எதுவுமே நடக்கவில்லை எனவே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என கூற அதற்கு அவரும் இன்றைய நாளை அமோகமா இருக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம் என பாட்டி சந்தோஷப்படுகிறார்.
இதனைப் பற்றி முத்து மீனாவிடம் கூற முத்து ஆள விடுங்க என ஊருக்கு கிளம்புகிறார். அப்பொழுது பாட்டி, பாட்டி ஒருத்தி இருக்கிறதே மறந்திடு என கூறி மிரட்ட பிறகு வேறு வழி இல்லாமல் முத்து இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு பாட்டி இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் இல்லைனா இந்த ஊரு பக்கமே வராத என் முகத்திலேயே முழிக்காத என கூற முத்து மீனாவை பார்த்து யோசிக்கிறார்.
பிறகு முத்து நீங்க ஒரு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல இருந்து மாறப்போவதில்லை உங்க இஷ்டப்படி ஏதோ பண்ணுங்க என சொல்ல அதற்கு பாட்டி இப்பதாண்டா நீ என் பேரன் என கூறுகிறார் மீனாவும் சிரிக்க இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது