விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விழுந்த மீனாவை முத்து காப்பாற்றிய நிலையில் கண் விழித்த மீனா முத்துவை கட்டிப்பிடித்துக் கொள்ள முத்து ஒன்னும் இல்ல மீனா என்று ஆறுதலாக கூறி சமாதானப்படுத்துகிறார். இதனை தொடர்ந்து பாட்டி அங்க வர மீனா பாட்டியை கண்டுபிடித்து கொண்டு கண்கலங்க பிறகு பாட்டி மீனாவுக்கு தலையை துவட்டி விட நானும் தான் கிணத்துல குதிச்சேன் ஆனால் என்னை யாரும் கண்டுக்கலை என சொல்லி முத்து புலம்புகிறார்.
இதனை அடுத்து மீனா, முத்து, பாட்டி மற்றும் அன்னம் அக்கா என நான்கு பேரும் கோவிலுக்கு செல்கிறார்கள் முத்து விட்டா என்ன சாமியார் ஆகிடுவீங்க போல என்று சொல்ல இப்ப மட்டும் என்ன அந்த வாழ்க்கை தானே வாழ்ந்துகிட்டு இருக்க என அன்னத்தின் அக்கா நக்கலாக பேசுகிறார். பிறகு சாமி கும்பிட்டு விட்டு பாட்டி மீனா மற்றும் முத்துவை கோவிலை சுற்றி வரும் சொல்லிவிட்டு ஐயரிடம் இவர்களின் ஜாதகத்தை காட்ட செல்கிறார்.
மேலும் இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம் என ஜோசியர் சொல்ல அதற்கு பாட்டி சாந்தி முகூர்த்தம் நடந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என சொல்கிறார் இதனை அடுத்து பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம் என சொல்ல முத்து இதுக்கு தான் நான் ஊருக்கே வரமாட்டேன் என்று சொன்னேன் நான் கிளம்புறேன் என்ன சொல்லி கிளம்ப பாட்டி போடா போ இனிமே இந்த பாட்டி முகத்தில் மொழிக்காத் என சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார்.
நாச்சியார் வளர்ந்த பையனால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போச்சு என்ற பேர் எனக்கு கிடைக்கட்டும் இந்த பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் என் பையன் அண்ணாமலை கல்யாணம் பண்ணி வச்சான். ஆனா இவ இன்னைக்கி நட்டாத்துல நிக்கிறா அந்த பாவம் எல்லாம் யாருக்கு என் பையனுக்கு தானே வந்து சேரும் உனக்கு என்ன கவலை இருக்கு என சொல்ல முத்து இப்ப என்ன பண்ணனும் என கேட்கிறார்.
இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் என பாட்டி சொல்ல சரி நீங்க ஒன்னும் முடிவு பண்ணிட்டீங்கன்னா அது நடக்கிற வரைக்கும் விடமாட்டீங்க உங்க இஷ்டம் போல பண்ணுங்க என சொல்ல மீனா வெட்கப்படுகிறார் மறுபுறம் அம்மாவும் கிருஷ்ம் சென்னைக்கு வந்திருக்க ரோகிணி பியூட்டி பார்லரை சுற்றி காட்டி பத்திரிகை எடுத்துக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டுல எனக்கு அம்மாவே இல்லன்னு சொல்லி இருக்கிறேன் அதனால நீ கல்யாணத்துக்கு வரக்கூடாது கல்யாணம் முடிஞ்ச பிறகு நானே வந்து பார்க்கிறேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
மேலும் என் மாமியார் தான் பியூட்டி பார்லர் திறக்க பணம் கொடுத்தாங்க அதனாலதான் அவங்க பேரு வச்சிருக்கேன். ஒரு ஓரமா நின்னு உன்னுடைய கல்யாணத்தை பார்க்கிறேன் என அவருடைய அம்மா சொல்ல ரோகினி நீங்க வந்தா என்னால சந்தோஷமாக முடியாது என சொல்லி அனுப்பி வைக்கிறார் இதோடு சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.