விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் விஜய் பாட்டியின் காலை அமுக்கி கொண்டிருக்க அவர் கல்யாணத்துக்கு செலவு இருக்குல்ல என்று சொல்ல அண்ணாமலை இப்போ மனோஜ் வேலைக்கு போறான் வரத வச்சு சமாளித்து கொள்ளலாம் என கூற விஜய் அதிர்ச்சி அடைகிறார் பிறகு இன்னமும் நாம் அமைதியாக இருந்தால் இந்த ஆளே காரியத்தை கெடுத்து விட்டு விடுவார்.
எனவே குத்தகை பணம் பற்றி பேச முத்து கைதட்டி கொண்டு இப்பதான் எனக்கு புரிஞ்சு போச்சு முருகா நீ இருக்க என்று விஜயாவின் திட்டத்தைப் பற்றி புட்டு புட்டு வைக்க பாட்டி குத்தகை பணத்தோட காய்கறி வித்த பணமும் இருக்கு என சொல்லி பணத்தை தருவதாக சொல்ல விஜய் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு பாட்டி பணத்தை எடுத்துக் கொடுக்க விஜயா அதை வாங்கிக் கொண்டு அண்ணாமலை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார்.
முத்துவும் மீனாவும் வெளியே வர பாட்டி அண்ணாமலையிடம் இன்னும் அவங்க சேர்ந்து வாழ தொடங்கல நான் அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து அவங்கள சேர்த்து வைத்து அனுப்புகிறேன் என சொல்லி வழி அனுப்பி வைக்கிறார். இதனை அடுத்து மறுபுறம் ரவி பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி வேகமாக அவனது பைக்கின் குறுக்கே சென்று வண்டியை நிறுத்தி போனில் பேசிக் கொண்டிருக்க இதனால் ரவி சுருதியின் பைக்கை இழுத்து சண்டை போட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
இதனை அடுத்து ஸ்ருதி டப்பிங் நடுவில் கடுப்பாகி ரவிக்கு போன் செய்து இந்த மாதிரி என்கிட்ட ஒருத்தன் சண்டை போட்டான் ஒரே மூடு அப்செட்டா இருக்கு என சொல்ல ரவிக்கு அப்பொழுதுதான் பேசுவது ஸ்ருதி என தெரிய வருகிறது. மேலும் சுருதி அவனை நீ அடிக்கணும் எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணு நம்ப பிரண்ட்ஷிப் இன்னும் ஸ்ட்ராங்காகிவிடும் என சொல்கிறார்.
என்னை அடிக்க என்கிட்ட சொல்றியா என ரவி நினைத்துக் கொண்டு அவனை நான் பார்த்தது கூட கிடையாது என்று சொல்ல சுருதி எனக்கு ஸ்கெட்ச் பண்ண நல்லா தெரியும் ஒரு முறை பார்த்தாலே அப்படியே வரைந்து விடுவேன் அவனை நான் வரைந்து உனக்கு அனுப்புகிறேன் என்று சொல்கிறார். பிறகு அப்படியே ரவியின் போட்டோவை வரைந்து போட்டோ எடுத்து அனுப்பி வைக்க இதனை பார்த்த ரவி அப்படியே வரைந்து இருக்க இதை கூலிப்படை கிட்ட கொடுத்தா என் கதையை அவ்வளவுதான் என நினைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மீனா முத்துவும் வயலுக்கு வந்திருக்க அப்பொழுது முத்து ஒருவரிடம் பேசிவிட்டு வருவதாக சொன்னதால் மீனா க்ரிஷுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அப்பொழுது பால் பறந்து ஓட கிருஷ் நான் எடுத்துக்கிட்டு வரேன் என கிணற்றின் அருகே ஓட மீனா பாதரி ஓடிப்போய் தவறி கிணற்றில் விழுகிறார்.
இதனால் கிரிஷ் முத்துவிடம் ஓடி வந்து நடந்த விஷயத்தை சொல்ல முத்து பதறி ஓடி கிணற்றில் குதித்து மீனாவை தூக்கிக் கொண்டு மேலே வருகிறார். பிறகு எல்லாரும் மீனாவை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க முத்து கையை தேய்த்து விட ரோகிணியின் அம்மா காலை தேய்த்து விடுகிறார்.
தண்ணீர் குடித்திருப்பாள் அமுக்கி விடுங்க என்று சொல்ல முத்து மீனாவின் வயிற்றை அமுக்க கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து தண்ணியும் வெளியில் வந்து விடுகிறது. கொஞ்ச நேரத்தில் மீனா கண் விழித்து விட முத்து உனக்கு ஒன்னும் இல்லை என என நிம்மதி அடைகிறார் பிறகு மீனா முத்துவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.